மதுரை,டிச.20- தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பால சுப்பிரமணியன் நியமனத்தை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தராக பால சுப்பிரமணியன் நியமிக்கப் பட்டதில் விதிமீறல் நடை பெற்றுள்ளதாகவும், உரிய தகுதி இல்லாத நபர் நியமிக்கப் பட்டுள்ளதால் அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அதில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நிய மனத்தை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.