அதே போன்று பல்லாயிரக்கணக்கான ஆதிவாசிகளை நிலப்பிரபுக் கள் மற்றும் மகாஜன்கள் என்ற கந்துவட்டிக்காரர்களிடமிருந்து மகாராஷ்டிராவின் ஒர்லி பகுதியில் மீட்டது கம்யூனிஸ்ட்டுக் கட்சியே! இதேபோன்று கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி நடத்திய தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டமென்பது ஏழை, எளிய விவசாயிகளும், கைவினைஞர்களும், நிலப்பிரபுக் களுக்கு ‘வெட்டி’ எனப்படும் இலவசமாக பொருட்களைத் தர வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்ற ஆண்டாண்டுக்கால அடிமைத்தனத்தை முற்றி லும் ஒழித்துக் கட்டியதாகும். ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் சாத னைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கமும், மார்க்சிஸ்ட் இயக்கமும் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றன. இந்த 100 ஆண்டுகளில் அது சந்திக்காத சவால் எதுவுமில்லை. இன்று அது இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், மக்கள் ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், சமூக நீதிக்கும், காவலனாக நின்று போராட வேண்டியுள்ளது. 130 கோடி இந்திய மக்களை மத, இன, மொழி அடிப்படையில் பிரித்தாளும் மோடி அரசாங்கத்தின் ஆபத்தான
கொள்கைகளுக்கெதிராக, இந்திய நாட்டின் உழைப்பாளி மக்களைப் பிழிந்து நாட்டின் பொருளாதாரத்தையே ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகளின் காலடியில் வைக்கும் அதன் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளுக்கெதிராக, நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவரும் இந்துத்துவா வெறிப் போக்கிற்கெதிராக 100 ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கம் பெரும் போராட்டம் நடத்தி வருகிறது. கம்யூனிஸ்ட் இயக்கமானது பி.ஜே.பி தலைமையிலான இந்துத்துவா என்றழைக்கப்படும் இந்து மதவாத சக்திகளை, நவீன பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடி வருகிறது. அதே போன்று சாதிய ஆதிக்கச் சக்திகளின் கொடூரத் தாக்குதலை முறியடித்து தலித் மக்களையும், பழங்குடி மக்களையும் காக்கும் போர் வீரனாக நின்று செயல்பட வேண்டியுள்ளது. இந்திய, பன்னாட்டு முதலாளிகளின் தாக்குதல்களிலிருந்து தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைப்பாளி மக்களைப் பாதுகாக்கும் கேடயமாகவும், பெண் உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வீரனாகவும் செயல்பட்டு வருகிறது.
இன்று உலகில் 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தாற் போல, பல லட்சக்கணக்கான கட்சி உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியும் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய நிகழ்வாகும். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறு ஆண்டுக்கால வரலாறு என்பது எழுச்சியூட்டும் காவியமாகும்! அதன் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்!