tamilnadu

img

ஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு

சென்னை,ஆக.18- பால் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு திங்கள் (ஆக.19) முதல் அமலுக்கு வருகிறது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பசுந்தீவனம் உள்ளிட்ட இடு பொருட்களின் விலை 4ஆண்டுகளில் உயர்ந்துள்ள தால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததாக தெரி விக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில் பசும் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்று க்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக உயர்த்தப்படுவ தாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்திருக்கிறது. நுகர்வோருக்கு தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தி யாளர் ஒன்றியங்களின் கூட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்த ப்படுவதாக குறிப்பிடப்பட்டு ள்ளது. 

முதலமைச்சர் விளக்கம்

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை, சேலம் மாவட்டத்தில் ஆக.19 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, சென்னையிலிருந்து,  விமானம் மூலம் சேலத்திற்கு வந்த முதலமைச்சர், விமான நிலைய வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பால் கொள்முதல் மற்றும் விற்பனை உயர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், பால் உற்பத்தியாளர்கள், எதிர்க்கட்சி தலைவர் என அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக கூறினார்.