tamilnadu

img

இன்னும் திருந்தியபாடில்லை

அரசுப்பள்ளியை ஆக்கிரமித்த அதிமுக கொடி மரங்கள்

பொள்ளாச்சி, நவ. 26- பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளி மற்றும் சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் அதிமுகவினர் கட்சி கொடிக் கம்பங்களை நட்டு வைத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட அரசுப்பள்ளி  வளாகத்தில் புதனன்று (இன்று) அரசு நலத்திட்டங்கள் வழங்கும் முகாம் நடை பெற உள்ளது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிலை யில், இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும் அமைச்சரை வரவேற்கும் வகையில், உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள்  தங்களது பலத்தை காட்டும் விதமாக அரசுப்பள்ளி முதல் பேருந்து நிறுத்தம் வரை ஆனைமலை பிரதான சாலை யில் ஏராளமான அதிமுக கட்சி கொடிக் கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். 

ஏற்கனவே, சென்னை மற்றும் கோவையில் அதிமுகவினரால் வைக் கப்பட்ட பேனர், கொடிக்கம்பத்தால் விபத்து ஏற்பட்டு ஒரு இளம்பெண் உயிரிழந்ததும், மற்றொரு இளம்பெண் கால்களை இழந்த கொடூரமும் அரங் கேறியது. மேலும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் பொதுமக்க ளுக்கு இடையூறாக கொடிக்கம் பங்களோ அல்லது பேனர்களோ வைக்கக்கூடாது என நீதிமன்றங்கள் அறிவுறுத்தியுள்ள போதும் ஆளுங் கட்சியினர் அதை மீறுவது வாடிக்கை யாகி வருகிறது. இது பொதுமக்களி டையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.