tamilnadu

img

இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் தமிழகம் போர்க்களமாக மாறும்

பெ.சண்முகம் எச்சரிக்கை

சென்னை,மே 27- இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் தமிழகம் போர்க்களமாக மாறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் எச்சரித்துள்ளார்.

போராட்டத்தின்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: மாநில அரசின் உரிமையை பறிக்கக் கூடிய முறையிலும், தமிழகத்தில் உள்ள இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலும், மின்சார திருத்தச் சட்டம் - 2020-ஐ கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது. மாறாக, கைவிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் தமிழகம் போர்க்களமாக மாறும். சென்னை உயர்நீதிமன்றம் சிறுகுறு விவசாயிகளுக்கு கொரோனா கால நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க அறிவுறுத்தியது. ஜூன் மாதத்திலிருந்து விவசாயப் பணிகள் தொடங்க வேண்டி உள்ளது. எனவே, நீதிமன்ற அறிவுறுத்தல்படி விவாசயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும். கூட்டுறவு, தேசிய வங்கிகளில் கடன் கோருகிற அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும், காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணியை நேர்மையாக செய்ய, விவசாய பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.