வேதாந்தா மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் - ஆலையை மூட வேண்டுமென்ற அரசின் உத்தரவு நீடிக்கும்
சென்னை,ஆக.18- தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு விதித்த உத்தரவு நீடிக்கும் என்றும் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறு வனம் தாக்கல் செய்த மனுக்கள் அனை த்தையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தர விட்டுள்ளது.
முதல் வழக்கு
தூத்துக்குடியில் மக்களுக்கும் சுற்று ச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகை யால் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள தாக மக்கள் தெரிவித்தனர். மக்க ளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர் லைட் ஆலையை மூடக்கோரி அப்போதைய சிஐடியு மாவட்டச் செய லாளரும் தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான க.கனக ராஜ் முதன்முதலாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
துப்பாக்கிச்சூடு
ஆலையை மூடக்கோரி 2018 ஆம் ஆண்டு மே 22 அன்று மக்கள் நடத்திய ஆவேசமான பெரும் போராட்டத்தில் தமிழக காவல்துறையினர் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கொடுஞ்செயலை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கடுமை யாக கண்டித்தனர். பாதிக்கப்பட்ட மக்க ளை முதன்முதலாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து முதன்முதலாக தூத்துக்குடி நகரில் உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனப்பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்று உரையாற்றினார். மக்கள் மற்றும் அர சியல் கட்சிகளிடம் எழுந்த பெரும் கொந்தளிப்பிற்குப் பின்னர் தான் தமிழக அரசு 2018 மே 28 ஆம் தேதி யன்று ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடியது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை யை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. ஆகையால் ஆலையை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற த்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுணன் , தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் அரிராகவன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். ஆலை மூடப்பட்டதை எதிர்த்தும் ஆலையை செயல்படுத்த அனுமதி கோரியும் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ,ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சி யடைக்கக்கூடிய வகையில் தீர்ப் பளித்தது. தேசிய பசுமை தீர்ப்பா யத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செய லாளர் கே.எஸ். அர்ச்சுணன் தாக்கல் செய்துள்ள மனுவையும் (மனு எண் 163 09 / 2019) உச்சநீதி மன்றம் இணைத்துக்கொண்டது. அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விசாரிக்க பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனத் தெரிவித்தது.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞா னம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். பல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், தில்லி மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறி ஞர்கள் ஆர்.வைகை, என்.ஜி.ஆர்.பிரசாத், வைகோ, இ.சுப்பு முத்துராமலிங்கம், டி.மோகன், பாலன் அரிதாஸ், யோகேஸ்வரன் ஆகியோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி 8 அன்று உத்தரவிட்டனர்.
வேதாந்தா கோரிக்கைகள் தள்ளுபடி
இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், வி. பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு ஆகஸ்ட் 18 அன்று காலை 10.30 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் தீர்ப்பளித்தனர். அதில், தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதா ந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவையும் தள்ளுபடி செய்தனர். உச்சநீதிமன்ற த்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரி வித்தனர். ஆலைக்கு மின் இணைப்பு தர வேண்டும், குடிநீர் இணைப்பு தர வேண்டும் என்ற மனுக்களை யும் தள்ளுபடி செய்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கியது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டா டினர். தீர்ப்பின் முழு விவரம் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பாத்திமா ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டுமென ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு சிப்காட்டில் வழங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. ஆகவே பாத்திமா தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு ஏதும் வழங்கப்படவில்லை. இந்த இரு வழக்கு களும் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்களுக்கு பாராட்டு
இந்த வழக்கில் பொறுமையாக வாதாடிய வைகோ, வழக்கறிஞர்கள் இ.சுப்பு முத்துராம லிங்கம், ஆர்.வைகை, யோகேஷ்வரன், பூங்குழலி, அப்துல் சலீம், மாசிலாமணி, சி.எஸ்.வைத்திய நாதன், மோகன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்களுக்கு நீதிபதி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வார்கள் என்பதால், கேவியட் மனுக்களை தாக்கல் செய்ய விருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மில்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செய லாளர் கே.எஸ். அர்ச்சுணன் தாக்கல் செய்த வழக்கில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான், இ.சுப்பு முத்து ராமலிங்கம், என்.ஜி.ஆர்.பிரசாத், சீனிவாசராகவன். பர்வீன் பானு. வாமணன், கிஷோர், மோகன்காந்தி ஆகியோர் வாதாடினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
தீர்ப்பை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இதன் மீது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக வேதாந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை நிலை நிறுத்தப்பட்ட சட்ட நிலையை உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, வழக்கை எச்சரிக்கையாகவும், வாதங்களை உறுதியாகவும் முன் வைத்து, தூத்துக்குடி மாவட்ட மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள் ளார்.