திருநெல்வேலி, ஜுன் 3-மாநில பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்கள், அந்தந்த மாநிலத்தவர்களுக்கே வழங்க வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும் என நெல்லையில் சி.ஐ.டி.யு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்புமாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணி யன் தெரிவித்தார் இதுகுறித்து அவர் பாளையங் கோட்டை மகாராஜநகர் சி.ஐ.டி.யு சங்க அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 50ஆவது ஆண்டு விழாவையொட்டி மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதில் தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை தமிழகத் திலேயே உற்பத்தி செய்யவேண்டும். தமிழகத்துக்கு தடையற்ற மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த மாநாட்டில் முன்னெடுக்கவுள்ளோம். மின்வாரியத்தில் உதவி மின்பொறி யாளர்கள் காலிப்பணியிடங்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. அதில் 325 உதவி மின்பொறியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் வெளி மாநி லத்தில் உள்ள 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள36 பேர் பாதிக்கப்படுகின்றனர்.
ஆந்திரம், கர்நாடகத்தைப் போல்,தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்த வர்களுக்கே கொடுக்கவேண்டும் என்ற சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும்.தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 16 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவை. நமது மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மற்றும் மத்தியதொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரம் ஆகியவற்றை சேர்த்து 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக் கிறது. மீதம் உள்ள 5 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிட மிருந்து அதிக விலை கொடுத்து பெறுகின்றனர். அதை ஈடுகட்ட தற்போது 30 சதவீதமின்கட்டண உயர்வு செய்யவுள்ளனர். இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவர். இந்த கட்டண உயர்வு கொள்கையை அரசு திரும்பப் பெறவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சிஐடியு மின் ஊழியர் மத்தியமைப்பின் நிர்வாகிகள் வண்ணமுத்து, பீர்முகம்மது ஷா மற்றும் வீ.பழனி, பி.தியாகராஜன், கந்தசாமி உள்ளிட்டோர் இருந்தனர். முன்னதாக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநில மாநாட்டுக்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. வரவேற்புக்குழு கமிட்டி தலைவர்பீர் முகமது ஷா தலைமை வகித்தார். செயலாளர் வண்ணமுத்து, பொரு ளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரவத் தலைவர் வி.பழனி வரவேற்றார். மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் பங்கேற்று, ஆலோ சனைகளை வழங்கினார். மாநிலச் செயலாளர் எஸ்.அப்பாதுரை, மாநில தலைவர் வை.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.