tamilnadu

img

கரைவலை தோணி மீனவர்களை காப்பாற்ற வேண்டும்... இராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு

இராமநாதபுரம்:
இரமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடல் வளம் மீன்வளம் பாதிக்காத வகையில் பாரம்பரிய முறையில் மீன்பிடிப்பு செய்யக்கூடிய சுமார்250 கரைவலை தோணிகள் உள்ளன.இதன் மூலம் மூன்று தலைமுறைகள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன இத்தொழிலில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சரிசமமாக சுமார் 10 ஆயிரம் பேர் வரை நேரடியாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இராமநாதபுரம் தாலுகாவில் பூத்தோண்டி, இலந்தைகூட்டம், பழனிவலசை பகுதியைச்சேர்ந்த 300 பேர் அவர்கள் வழக்கமாக தொழில் செய்யும் தேவிபட்டிணம் கடல் பகுதியில் மீன்பிடிக்கக்கூடாதென தள்ளுவலை, தூண்டில் மூலம் கணவாய் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மீனவர்களில் ஒரு பகுதியினர் பிரச்சனை செய்கின்றனர். இப் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இருதரப்பு மீனவர்களின் தொழில்பாதிக்காத வண்ணம் வருவாய்துறை, காவல்துறை, கடலோர காவல் குழுமம், மீன்வளத்துறை ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென கடல் தொழிலாளர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி, கரைவலை தோணி சம்மாட்டிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில்பூத்தோண்டி எஸ்.முருகேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, எஸ்.கேகணேசன், ராமமூர்த்தி,பூமிநாதன், இராஜேந்திரன் ஆகியோர்ஆட்சியரிடம் மனு அளித்தனர்.