tamilnadu

img

கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் 10,12 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த வேண்டாம்

கோவை மாவட்டம் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் அறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11,12 வகுப்பு விடுபட்ட பொதுத்தேர்வுகள்  நடத்துவது----தமிழக கல்வித்துறை நடவடிக்கை குறித்து கோவை மாவட்டம் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் அறிக்கை : 

 சென்னை உள்ளிட்ட கொரோனா தொற்று பாதிப்பு உள்ள  இடங்களில் பத்தாம்  வகுப்பு மற்றும் விடுபட்ட வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை நடத்துவதில்  உள்ள இடர்ப்பாடுகளை கவனிக்க வேண்டும். பள்ளிகளில் படித்த மாணவ--மாணவியர் பெற்றோர்களுடன்  வருமானமின்றியும், வாழ்க்கை நடத்த முடியாமலும்,  சொந்த ஊர்களுக்கு  சென்றிருக்கிறார்கள் . அனைவரும்  அவரவர் பள்ளிகளுக்கு வந்து , தேர்வு எழுதி முடியும் வரை தங்குவதற்கு  வாய்ப்பு இல்லை என்ற நிலை உள்ளது. மாணவர்-பெற்றோர்களுக்கு நோய் தொற்று இருப்பின்  தனிமைப்படுத்துதல்  மேற்கொள்வது மற்றும்  தேர்வுக்கு பின்னர்   நோய் தொற்று ஏற்பட்டால் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்றும், மன அழுத்தம் ஏற்பட்டவர்களுக்கு, உளவியல் கலந்தாய்வு  நடத்த முடியாத நிலை உள்ளது. மலைவாழ் பகுதியில் உள்ள  மாணவ-மாணவியர்களின் நிலையை கவனத்தில் கொள்ளாமலும்,பல பள்ளிகளில் அடிப்படையாகத் தேவையான குடிநீர், கழிவறை, வகுப்பறை  சரியாக இல்லாத நிலையில் உள்ளது. இவ்வளவு இடையூறுகளுக்கு இடையில்  சில தனியார் பள்ளிகள் நிர்வாகத்தினரின்  வேண்டுகோளை ஏற்று, பள்ளிக்கல்வித்துறை  அடிக்கடி தேர்வுகள் குறித்த செய்திகளை வெளியிட்டு  வருவது அனைவருக்கும்  வருத்தத்தை அளிக்கிறது. எனவே வாழ்வாதாரம் இழந்த நிலையில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் பெரும்பாலும் பயின்று வருவது அரசு பள்ளிகள் என்பதை அரசு கவனத்தில் கொண்டு  நோய்ப் பரவல் குறித்த மைய-மாநில அரசுகளின்  உறுதியும், அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தான் பள்ளிக்கூடங்கள் திறக்க வேண்டும் என்ற நிலையில் , பல இலட்சம் மாணவ-மாணவிகளையும், அவர்தம் ஆசிரியர்களையும்  இன்னலுக்கு உள்ளாக்க வேண்டாமெனவும் , உடனடியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும், விடுபட்ட பதினொன்றாம்   மற்றும் பன்னிரெண்டாம்  வகுப்பு தேர்வுகளும்  நடத்தப்பட மாட்டாது என்று அறிவிக்க வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறையை கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

திரு.சந்திரசேகர்,
ஒருங்கிணைப்பாளர்,
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்,