சென்னை, ஜூலை 21- தமிழக அரசு அறிவித்த ஊரடங்குகால நிவாரணம் 3 ஆயிரம் ரூபாயை நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 21) தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தையல் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வட மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 10 மாதமாக வழங்காமல் உள்ள ஓய்வூ தியத்தை வழங்க வேண்டும், ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும், பள்ளி சீருடைகள் தைக்கும் தையல் தொழிலாளர்க ளுக்கு கூலியை முறைப்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள தையல் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சென்னை தி.நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு சென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தையல் சம்மேளன தலைவர் பி.சுந்தரம் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் சி.திருவேட்டை (வட சென்னை), பா.பாலகிருஷ்ணன் (தென்சென்னை), உள்ளிட்டோர் பேசினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.சுந்தரம், “4 மாதமாக உதவித்தொகை வழங்காமல் தொழிலாளர்கள் அலை கழிக்கப்படுகின்றனர். சென்னை மாவட் டத்தில் நலவாரிய உறுப்பினர்களாக உள்ள 33 ஆயிரம் தொழிலாளர்களில் 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிவாரணம் தரப்பட்டுள் ளது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கும் வழங்க வேண்டும்” என்றார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் நல்லூர் ஊராட்சி, பூந்தமல்லி, திருநின்ற வூர் உள்ளிட்டு 8 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.பச்சையம்மாள், பொருளா ளர் பி.நடேசன், உள்ளிட்டோர் பேசினர். திருவண்ணாமலை மாவட்ட தொழிலா ளர் நல வாரிய அலுவலகம், வாழவச்சனூர், செங்கம், ஆதமங்கலம் பூதூர், போளூர் மேக்களூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்க ளில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.வீரபத்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பாரி உள்ளிட்டோர் பேசினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் பி.ஸ்டாலின் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி எம்.ஆறுமுகம், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் உள்ளிட்டோர் பேசினர். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் மாவட்டச் செயலாளர் கே. பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்டச் செய லாளர் எஸ்.பரசுராமன் உள்ளிட்டோர் பேசினர்.