tamilnadu

img

பிரண்ட்ஸ் ஆப் போலீசை தடை செய்திடுக

திருச்சிராப்பள்ளி, ஜூலை 4- பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது. கொரோனா காலம் முடியும் வரை மின் கட்டணத்தை ரத்து  செய்ய வேண்டும். இஎம்ஐ உள்ளிட்ட நுண்நிதி கடன்களை முழுவதும் ரத்து செய்ய வேண்டும்.  சாத்தான்குளம் வியாபாரிகள் படு கொலைக்கு நீதி வேண்டும். ஃபிர ண்ட்ஸ் ஆப் போலீசை தடை செய்ய  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பி.பாலு தலைமை வகித்தார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளரசன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஒன்றியத் தலைவர் மோரீஸ் அண்ணா துரை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை ஏசுராஜா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவ ட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம் உள்பட கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வாலிபர் சங்கத்தின் மாவ ட்டச் செயலாளர் துரை.நாராயணன்  தலைமை வகித்தார். அறந்தாங்கியில் மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா  தலைமை வகித்தார். கந்தர்வகோ ட்டையில் மாவட்ட துணைச் செயலா ளர் இளையராஜா தலைமை வகித்தார்.
அறந்தாங்கி
அறந்தாங்கியில் வாலிபர் சங்கம் சார்பாக பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு வாலிபர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலை
வர் கே.குமார் தலைமை வகித்தார்.