tamilnadu

img

அராஜகத்தில் ஈடுபடும் வனத்துறைக்கு துணைபோகும் காவல்துறை

ஜவ்வாது மலையில் போராட முயன்ற 300 பேர் கைது

ஆம்பூர், ஜூலை 17- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில்  திருப்பத்தூர் மாவட்டம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற போது பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர்  அடுத்து ஜவ்வாது  மலையில் பல ஆண்டுகளாக அனுப வத்தில் உள்ள நிலத்தை உழுது  கொண்டிருந்த லோகநாதனை வனத்துறை அதிகாரிகள் பெருமாள்,  சரவணன் ஆகியோர் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.  இந்த தாக்குதலைக்  கண்டித்து   தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்  தின் மாநில தலைவர் டில்லி பாபு,  ஜவ்வாது மலை வாழ் மக்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயராமன்  ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது முன்னதாக  மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லி  பாபு செய்தியாளர்களிடம் கூறியதா வது: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் 40 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் கிட்டத்தட்ட நூறு ஆண்டு களாகப் பயிர் செய்து பிழைப்பு  நடத்தி வருகின்றனர். இந்த மலையில்  உள்ள எல்லா கிராமங்களில் அவரவ ரது அனுபவத்தில்  உள்ள நிலங்க ளைப் பாதி நிலங்களைத் தரிசாக  விட்டு  விட்டு ஆடு மாடுகள் மேய்ப்பார்கள். மூன்று ஆண்டுகள் பயிர் செய்யாமல் இருக்கின்ற தரிசு நிலங்களில் செடி  கொடிகள் வளரும், அந்த தழைகளை  மண்ணுக்கு உரமாகப் பயன்படுத்திப் பயிர் செய்வதும் வழக்கம்.  இதைச் சுத்தம் செய்ய டிராக்டர் போன்ற வாக னங்களை வனத்துறை  அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.

தமிழகத்தில் வன உரிமைச் சட்டத்தின் படி இதுவரை ஆயிரத் துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்க ளுக்கு வீடு, நில உரிமை பட்டா வழங்  கப்பட்டு வருகிறது. ஜவ்வாது மலை யில் உள்ள மலைவாழ் மக்க ளுக்கும் கிட்டத்தட்ட 92 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.  முதல்வர் மூல மாகவும் மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்கப்பட்ட பட்டாவைக் கையில் வைத்துக் கொண்டு நிலத்தை உழுது  பயிர் செய்த லோகநாதனை வனத் துறை அதிகாரிகள் அடித்து மிரட்டி விவசாயம் செய்யக் கூடாது என்று  அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து  திருப்பத்தூர் மாவட்  டத்தில் உள்ள கிராமிய காவல் நிலைய  ஆய்வாளரிடம் புகார் செய்யப் பட்டது. அவர் துணை ஆய்வாளர் மஞ்சு நாதன் என்பவரிடம் இந்த மனுவை விசாரிக்கச்  சொல்லிவிட்டுச் சென்று விட்டார். துணை ஆய்வாளர் மஞ்சு நாதன் லொகநாதன் யாரைப் பற்றி  புகார் கொடுத்தாரோ அந்த வனத் துறை அதிகாரிக்கே  நேரடியாக போன்  செய்து “உங்கள் மீது புகார் கொடுக்க  ஒரு மலைவாழ்  கிராமத்தான் வந்தி ருக்கிறான். நான் என்ன செய்வது’’ என்று கேட்டிருக்கிறார். பின்பு லோகநாதனை சுமார் ஒன்றரை மணிநேரம் அலைக்கழித்து விட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து  காவல்துறை  அதிகாரிகளான டிஜிபி,  டிஐஜி மற்றும் காவல் கண்காணிப்பா ளர் இவர்களுக்கெல்லாம் புகார்  செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதற்கு முன்பு 25.5.2020  அன்று கீழையூர்  கிராமத்தில் உள்ள  அண்ணாமலை நிலத்திலிருந்த குடி சையில் சமையல் பாத்திரத்திலிருந்த சாப்பாட்டை எடுத்து கீழே கொட்டி வாழைச் செடிகளையும் துண்டு துண்டாக வெட்டி வனத்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். இப்படி வனத்துறையினர் அடிக்கடி மலை  வாழ் மக்களை விவசாயம் செய்யக் கூடாது என மிரட்டுவதும், பொய் வழக்குப் போடுவதும்  பணம் பறிப்ப தும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டப்படி ஒதுக்கப்பட்ட தங்க ளது  நிலத்தில் விவசாயம் செய்ய  மலைவாழ் மக்களை வனத்துறை யினர்  அனுமதிக்க வேண்டும், பாதிக்  கப்பட்ட லோகநாதனுக்கு நியாயம்  கிடைக்கவேண்டும். வனத்துறையின ருக்கு ஆதரவாகச் செயல்பட்ட காவல்நிலைய துணை ஆய்வாளர் மஞ்சுநாதன் மீதான புகார் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி  துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் சக்திவேல், ஜவ்வாது மலை வாழ் மக்கள் சங்கத்  தலைவர் லட்சுமணன், மற்றும் நிர்வாகி கள் ராஜா, ஜெயராமன், ஜெயன் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.