tamilnadu

img

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் கோவிட் 19 வார்டில் ஒருவர் மரணம்

நாகர்கோவில், மார்ச் 26- குமரி மாவட்டம் நாகர்கோவில், ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கோவிட் 19 சிகிச்சைக்காக தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பத்துக் கும் மேற்பட்ட படுக்கைகளும், 24 மணி நேர மும் கண்காணிக்கும் மருத்துவர்களும் நிய மிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வரு கிறது.இதுவரை இந்த வார்டில் 10க்கும் மேற்பட்டோர் கோவிட் 19 நோய் அறிகுறி யுடன் சிகிச்சை பெற்று நோய் இல்லாமல் திரும்பி சென்று உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 3 ஆம் தேதி குவைத் நாட்டிலிருந்து குமரி மாவட்டம் கோடிமுனை ஊரைச் சேர்ந்தவர் (வயது 40) சொந்த ஊர் வந்தார். அவருக்கு காய்ச்சல் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கோவிட் 19 சிறப்பு வார்டில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலை யில் அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரி சோதனைக்காக நெல்லைக்கு அனுப்பப் பட்டன. இதற்கிடையில் அவர் புதனன்று நள்ளி ரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகை யில், அவரை இங்கு சிகிச்சைக்காக சேர்க்கும் போது மூளை காய்ச்சல் மற்றும் லிவர் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். காய்ச்சல் இருந்ததால்  கோவிட் 19 சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டார். அவரது ரத்த, சளி மாதிரி யின் பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவர் எந்த நோயால் இறந்தார் என்பது தெரிய வரும் என்றனர்.

கடந்த வாரம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட் 19 வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயதுடைய பெண்ஒருவர் கடந்த சில நாட்க ளுக்கு முன் உயிரிழந்தார். அவருக்கு கோவிட் 19 பாதிப்பு இல்லை என அவரது மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது.