tamilnadu

img

திண்டுக்கல்லில் 2,500 பேருக்கு உணவு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி


திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் கிடையாது என தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறிவிட்டார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.  மாவட்டக் காவல்  கண்காணிப்பாளர் சக்திவேல், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  ஆய்வுக் கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் சீனிவாசன் செய்தியாளரிடம் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அரசு தலைமை மருத்துவமனையில் தனி கட்டடம் தயாராக உள்ளது.  
மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட  2,500 பேருக்கு மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.  விலைவாசியைக் கட்டப்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில்  884 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.விவசாயப் பொருட்கள் வாங்க முன் அனுமதி பெற வேண்டும் என்றார்.