இராமேசுவரம்:
75 நாட்களுக்கு பிறகு பாம்பன் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஞாயிறன்று மன்னார்வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். கொரோனா ஊரடங்கு உத்தரவால் இராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மத்திய-மாநிலஅரசுகள் அறிவித்தன. இந்நிலையில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஞாயிறன்று காலை 80 விசைப்படகுகளில் மன்னார்வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். முறையான அனுமதி பெற்று 75 நாட்களுக்கு பிறகு அவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.