சென்னை, ஏப்.7- பிரசவ தருவாயில் உள்ள பெண்களுக்காகவும் பச்சிளம் குழந்தைகளுக் காகவும் சேவை வழங்கி வரும் 102 ஆம்புலன்சானது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டயாலிசிஸ் மற்றும் கீமோதெரபி நோயாளி களுக்காகவும் தனது சேவையை விரிவுபடுத்தியு ள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டயாலிசிஸ் நோயாளிகள், பச்சிளங்குழந்தைகளை அவர்களது வீடுகளுக்கே சென்று அழைத்து வந்து சிகிச்சை முடிந்தபின் மீண்டும் வீட்டில் கொண்டு சேர்க்கும் பணியினை இந்த 102 ஆம்புலன்ஸ் செய்து வருகிறது. “எபிடெமிக் டிரான்ஸ்போர்ட் குரூப்” என்ற வாட்சப் குழு உருவாக்கப்பட்டு, அதில் இந்த 102 ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர். இந்தக் குழுவில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், அரசுத் துறை செயலாளர், ஐஏஎஸ் அதிகாரிகள் என பலரும் இடம்பெற்றுள்ளனர்.