tamilnadu

img

கோவிட் நோயாளியிடம் ஆம்புலன்ஸில் பாலியல் வல்லுறவு... கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.... அமைச்சர் கே.கே.சைலஜா

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டயில் கோவிட்நோயாளியான இளம்பெண் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் வைத்து ஓட்டுநரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரம் மற்றும் சமூக நீதித்துறைஅமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்தார்.  கோவிட்டுக்கு எதிரான செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ‘கனிவு 108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள். ஆனாலும் இத்தகைய சம்பவம் நடக்கக் கூடாது. இந்த சம்பவத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘கனிவு108’ ஆம்புலன்ஸில் வேலை செய்யும் ஊழியர்களில் காவல்துறையின் சான்று சமர்ப்பிக்காதவர்கள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் எனஆம்புலன்ஸ் இயக்கத்தை நிர்வகிக்கும் ஜிவிகேஇஎம்ஆர்ஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்இதுகுறித்து சுகாதாரத்துறையும் விசாரணை நடத்தும். பாதிக்கப்பட்ட யுவதிக்கு அனைத்துசிகிச்சையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்எனவும் அமைச்சர் கூறினார்.       

இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. சம்பவம் குறித்து அறிந்த உடன் பிரச்சனையில் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்ககாவல்துறையினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வேலையிலிருந்துநீக்க ஆம்புலன்ஸ் இயக்கத்தை நிர்வகிப்போரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. வேலையிலிருந்து நீக்கி விட்டதாக ஜிவிகே அறிவித்துள்ளது. நன்னடத்தை கொண்டவர்களையே ஆம்புலன்ஸ் ஊழியர்களாக நியமிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. 2014-2015 இல் ஆலப்புழா மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் வேலைசெய்த முன் அனுபவத்தின் அடிப்படையில் அந்ந நபரை வேலையில் சேர்த்ததாக ஜிவிகேதெரிவித்துள்ளது என அமைச்சர் கூறினார்.

அடூர் மருத்துவமனையிலிருந்து பந்தளம்மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நவுபல், 20 வயதுள்ள அந்தபெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது எனமிரட்டவும் செய்துள்ளார். இந்த குரலை அந்தபெண் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம்வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கஉள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்த அறிக்கை கேட்டுள்ளது.