tamilnadu

img

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்

தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில்  உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில்  ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டது. இதனால், சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மதுரை, திருச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களிலும் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.