சென்னை:
சென்னை உள்பட நான்கு மாவட் டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடின.
கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும், 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கடைகள் மதியம் வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. அலுவலகங்கள் இயங்குவது உட்பட, சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது.
அதே சமயம், ஜூன் 21 மற்றும் 28ஆம் தேதி ஆகிய இரண்டு ஞாயிற் றுக்கிழமைகளில் தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அத்தியாவசிய மருத்துவம் மற்றும் பால் விற்பனையகம் மட்டுமே திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.அதன்படி, சென்னையில் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.இந்த முழுமையான ஊடரங்கில் தனியார் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த வாகனங்கள், மருந்தகங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது.
அவற்றை தவிர காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப் பட்டிருந்தன. அதே போல் பிற வாகனங்கள் சாலைகளில் சென்று வர அனுமதிக்கப்படவில்லை.சென்னை அண்ணா சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் கிண்டி கத்திப்பாரா, திருவான்மியூர், அம்பத்தூர், பாடி, தாம்பரம் என மாநகராட்சியின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. வாகனங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டன. மக்களும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.பெரும்பாலான சாலைகளில் காவல்துறையினர் வாகன தணிக் கையை தீவிரப்படுத்தினர். காவல் துறை உயரதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தேவையின்றி வெளியே வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.சென்னையில் முழுமையான ஊரடங்கினால் எவ்வித அத்தியாவசியக் கடைகளும், உணவகங்களும் திறக் கப்படாத போதும், ஏழை, எளிய மக் களை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்கள் மட்டும் செயல்பட்டன.முழு ஊரடங்கையொட்டி எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையும் மூடப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளோ, வியாபாரிகளோ வராததோடு, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியே வெறிச்சோடிக் காணப்பட்டது.
சென்னை மாநகராட்சி முழுமைக்கும் அனைத்து வியாபார நிறுவனங்களும் சிறு கடைகள், தெருவோர கடைகள் உட்பட அனைத்தும் அடைக் கப்பட்டன. குறிப்பாக தி. நகர், புரசைவாக்கம் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் நாள் முழுவதும் முழுமையாக மூடப்பட்டன.சென்னை காவல் எல்லைக்குட் பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக் கப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக் கப்படுவதால், சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ் சாலையில் ஒருசில கனரக சரக்கு வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. சென்னை பெருநகர காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.