tamilnadu

img

முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்

சென்னை, ஏப்.26 - கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழ கத்தில் சென்னை உட்பட 5  மாநகராட்சிகளில் ஞாயிற்றுக்  கிழமை ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வரும் 28 ஆம் தேதி இரவு 9  மணி வரை இந்த முழு ஊர டங்கு அமலில் இருக்கும்.

கொரோனா நோய் தொற்று சென்னையில் தீவிர மாகி வருவதால் முழு ஊர டங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. அத்தியாவசிய பொருட்  கள் தவிர வேற எந்த கடை களும் திறந்திருக்க கூடாது  என்று உத்தரவிடப்பட்டுள் ளது. இதனால் சென்னை யில் உள்ள சாலைகள் வெறிச்  சோடி காணப்படு கின்றன.

சென்னை கோயம்பேடு பாலம், கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகள் வெறிச் சோடி காணப்படு கின்றன.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மருந்துக் கடைகளைத் தவிர்த்து அனைத்துக் கடை களும் மூடப்பட்டதால் போக்குவரத்து இன்றி சாலை கள் வெறிச்சோடின. ஆங்  காங்கு பலத்த போலீஸ் பாது காப்புப் போடப்பட்டுள்ளது. சாலைகளில் தேவையில்லா மல் சுற்றுவோர் மீது வழக்குப்  பதிந்து கைது செய்து வரு கின்றனர்.