காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சிஐடியு 14வது மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாராயணபாளைம் தெருவைச் சார்ந்த இளையராஜா, கிரிஜா தம்பதியரின் மகன்கள், கனிஷ்குமார், டிவேஷ் ஆகியோர் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 873 ரூபாயை மாநாட்டு நிதியாக மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், உதவி பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.