தருமபுரி, மே 16-தருமபுரியில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சத்துணவு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ மாநாட்டுக்கு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை மாநாடு சிறப் பாக நடத்துவது குறித்து தருமபுரியில் மாநிலத் தலைவர் சுந்தராம்மாள் தலைமையில் வரவேற்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான், மாநில துணைத் தலைவர் கே.அண்ணாதுரை ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு அரசு மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவர் எம்.சிவப்பிரகாசம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆகஸ்ட் மாதம் தருபுரியில் நடைபெறும் மாநாட்டை சிறப்பாக நடத்திட வரவேற்புக் குழுத் தலைவராக அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், செயலாளராக சத்துணவு ஊழியர்சங்க மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன், பொருளாளராக சி.காவேரி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.