tamilnadu

img

இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு தேதி அறிவிப்பு

சென்னை, செப்.21- விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பு பவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21ஆம்  தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டி யிட விரும்பும் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும்,  திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல்  3 மணி வரையும் தலைமையகத்தில் விண்ணப் பங்களை பெறலாம்.  விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆயிரம், பூர்த்தி  செய்த விண்ணப்பங்களை திங்களன்று பிற்பகல் 3 மணிக்குள் தலைமையகத்தில் வழங்க வேண்டும்  என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.