tamilnadu

img

ஆதிவாசி மக்கள் நவ.21 தில்லியில் பேரணி

திருவள்ளூர், அக்.13- ஆதிவாசி மக்களை வன நிலங்களிலிருந்து வெளியேற்றிட முயற்சிப்பதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், வன உரிமைச் சட்டத்தின் படி அனைத்து ஆதிவாசி மக்க ளுக்கும் நில உரிமை மற்றும் பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.21 அன்று தில்லியில் மாபெரும் பேரணி நடத்துவது என்று ஆதிவாசி உரிமைகளு க்கான தேசிய அமைப்பு முடிவு செய்துள்ளது. ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய மத்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்  அக்-12,13 ஆகிய  இரண்டு நாட்கள் திருவள்ளூரில் நடைபெற்றது. இந்த  கவுன்சில் கூட்டத்திற்கு அகில இந்திய இணை அமைப்பாளர் டாக்டர். பாபுராவ் (ஆந்திரா) தலைமை தாங்கினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், ஆதிவாசி உரிமைகளுக் கான தேசிய அமைப்பின் அகில இந்திய  அமைப்பாளர் ஜிதேந்திர சௌத்ரி, மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் தேப்லினா ஹெம்ராம் உட்பட ஆந்திரா, தெலுங்கானா, அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு மாநில அமைப்பாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி,  ஆதிவாசி அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

அந்நிய கார்ப்பரேட் நிறு வனங்களின் கொள்கைகளை யும், இந்து மத வெறி அமைப்புகளான ஆர்எஸ்எஸ், விஎச்பி செயல் திட்டங்களையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருதை தடுக்க வேண்டும். தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் உள்ள ஆதிவாசி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், இனச் சான்று பெற மொழி, கலாச்சாரம் போன்றவற்றை பாது காப்பதற்கான தேசிய ஆணையம் அமைக்க வேண்டும்,  வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்,  தனியார் நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு இட ஒதுக்கீடு, பதவி உயர்வும் அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.