tamilnadu

img

சாலை விபத்தில் 3 பேர் பலி

திருவண்ணாமலை, நவ. 26- திருவண்ணாமலை மாவட்டம்  தேவிகாபுரம் அருகே   டிராக்டர் -   இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.   திருவண்ணாமலை மாவட்டம்  போளூர் அடுத்த சேத்துப்பட்டு அருகே உள்ள தச்சாம்பாடி கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் மகிமை தாஸ் (55),  தங்கம் (எ) ஞானப்பிர காசம் (60) இருவரும் தேவிகா புரம் பேருந்து நிலையத்தில், சொந்த ஊரான தச்சாம்பாடி கிரா மத்திற்கு செல்ல காத்திருந்துள்ள னர். 

அப்போது அதே கிராமத்தைச்  சேர்ந்த அந்தோணி (35) என்பவர்  இருசக்கர வாகனத்தில் தேவிகா புரம்  சென்று விட்டு, தச்சாம்பாடி செல்வதற்கு வந்துள்ளார். அப்போது, ஞானப்பிரகாசம் மற்றும் மகிமைதாஸ் ஆகிய இரு வரும், லிப்ட் கேட்டு அந்தோணி யின்  இருசக்கர வாகனத்தில் மூவ ரும் வந்துள்ளனர். தேவிகாபுரத்திலிருந்து -   தச்சாம்பாடி கிராமத்திற்கு வரும்  வழியில் முத்தாலம்மன் நகர் அருகே செல்லும்போது செங்கல்  லோடு ஏற்றிக்கொண்டு முன்னால்  சென்ற டிராக்டரை முந்திச் செல்லும் போது நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டது.

இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச்சென்ற  மகிமை தாஸ் மற்றும் ஞானப்பிரகாசம் மீது  டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்தி லேயே 2 பேர் பலியானார்கள். இரு  சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்தோணி, படு காயத்துடன் உயி ருக்கு ஆபத்தான நிலையில் திரு வண்ணாமலை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்த னர். திருவண்ணாமலை மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தோணியும் சிகிச்சை பலனின்றி பலியான தால் பலி எண்ணிக்கை 3 ஆக  உயர்ந்தது. தகவலறிந்த காவல்  துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை  கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்  காக, ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து  சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து  வருகின்றனர்.