tamilnadu

தண்ணீர் பிரச்சனை: ஆணையர் ஒப்புதல்

 புதுச்கோட்டை,ஜூன்23- புதுக்கோட்டை மாவட்டம் வள்ளத்திரா கோட்டையில் அரசுத் தோட்டக்கலை துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் பழபண்ணையை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்திய கோபால், “தேர்தல் நடத்தை விதிமுறை கள் காரணமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது” என்றார். தமிழகத்தில் 24 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை இருந்தா லும், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான் அதிக அளவு பிரச்சனை இருப்பதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தெரி வித்துள்ளார்.