புதுக்கோட்டை:
தமிழனின் பொக்கிசமாகத் திகழும் பொற்பனைக்கோட்டை அகழாய்வைத் தொய்வின்றித் தொடர ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள் ளார்.
புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை சனிக்கிழமையன்று பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக தமிழனின் வரலாறும் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு போன்ற அகழாய் வைத் தொடர்ந்து தற்பொழுது கீழடிமுக்கிய சான்றாகத் திகழ்கிறது. சித்தன்னவாசல், குடுமியான் மலை, கலசமங்கலம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான தொல்லியல் நினைவுச் சின் னங்கள் உள்ளன. தற்பொழுது பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் சங்ககாலத்து பொருட்கள் கிடைத்துவருவது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழனின் பொக்கிசமாகத் திகழும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தின் மூலம்பேராசிரியர் இனியன் தலைமையில் நடைபெற்று வருகிறது. சிறிய அளவிலான நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் இந்த அகழாய்வு தொய்வின்றித் தொடர ஒன்றிய, மாநில அரசுகள் முன்முயற்சி எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து சட்டமன் றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வர்.கொடநாடு சம்பவத்தில் ஏராளமான மர்ம முடிச்சுகள் உள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த வீட்டில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது.
அதிமுக ஆட்சியில் முறையாகவிசாரணை நடத்தப்படவில்லை. இந்தப் பின்னணியில் முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே யார் தவறு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக் காலம்நிறைவடையும் நிலையில் மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால்சிறிய கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனால், அரசு உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக வரலாற்றில், அதன் வளர்ச்சியில் மிக முக்கியமான அங்கமாக திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர். அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதில் தவறு ஏதும் இல்லை.இக்கட்டான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த 110 நாட்களில் தமிழக அரசு பல்வேறு நிலைகளில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அரசு ஊழியர் களுக்கான அகவிலைப்படியை வழங்குவது, பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்சனைகளையும் அரசு தீர்த்து வைக்க வேண்டும்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் குறிப்பிட்டார். பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.