tamilnadu

img

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

அறந்தாங்கி, ஜூன் 30- ரோட்டரி கிளப் சார்பில் அரசு மருத்துவ மனைக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான மரு த்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. அறந்தாங்கி ரோட்டரி சங்கத் தலைவர் சுரே ஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜமீர்பாஷா முன்னிலை வகித்து மருத்துவ உபகரணங்க ளை வழங்கினார்.  அறந்தாங்கி அரசு மகப்பேறு மருத்துவ மனையில் நாளொன்றிக்கு 20-லிருந்து 30 குழ ந்தைகள் வரை பிறக்கின்றனர். இங்குள்ள தாய்-சேய்களுக்கு நோய்த் தொற்றுப் பரவா மலிருக்க, அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் இயந்திரம் மூலம் தூய்மை செய்ய ப்படுகிறது. அதற்கு உதவிடும் விதமாக அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான ஆடை சலவை மற்றும் உலர் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றி லிருந்து பாதுகாக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான முழு பாதுகாப்பு உடை கள், சானிடைசர், முகக்கவசங்கள் வழங்க ப்பட்டது.