மன்னார்குடி, மார்ச் 26 - அமெரிக்க வாழ் இந்தியர்களால் செயல் படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட் டளை சார்பில் ரூ.6.5 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சிவ.ராஜரத்தினம் திருத்துறைப் பூண்டியில் தெரிவித்தார். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு வாஷிங்டன் முருகன்கோவில் உறுப்பினர்கள் வழங்கிய ரூ. 9.90 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 3 முறை ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் ரூ.6.50 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. கஜா புயல் பாதிப்பின் போது ரூ.5 கோடியில் கான்கிரீட் வீடுகள் கட்டவும், கடற்கரையோர மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நாகை, திருவாரூர் மாவட்டங் களில் பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அதில் பயிலும் மாணவர்களுக்கு தனி ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடு அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட பயிற்சியில் நாகை மாவட்டத் தைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றிப் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது என்றார். தலைமை மருத்துவ அலுவலர் ஆர். சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஆர்.எஸ்.பாண்டியன், ராணி ராஜரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மூத்த வழக்கறிஞர் கோ.தர்மராஜன், நா. பாலன், தலைமை மருந்தாளுநர் கருணா நிதி, திமுக ஒன்றியச் செயலாளர் முகில், ராஜேந்திரன் மருத்துவமனை தலைமை செவி லியர் பத்மினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மருந்தாளுநர் டி.மணிவண்ணன் வரவேற்றார்.