tamilnadu

மாணவனை அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை, அக்.13- புதுக்கோட்டை பேராங்குளம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு  படித்து வந்த மாணவர் நஜிபூர் ரகுமான்.  இவர் ரெக்கார்டு நோட்டு எழுதவில்லை எனக்கூறி அபப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரி யர் அருளானந்தம் புதன்கிழமையன்று பிரம்பால் கடுமையாக அடித்து தாக்கி யுள்ளார். இதில் மாணவர் நஜிபுர் ரகுமா னுக்கு கால் மற்றும் முதுகுப் பகுதியில் கடுமை யான காயம் ஏற்பட்டது. ஆசிரியர் தாக்கியது குறித்து தனது பெற்றோரிடம் மாணவர் தெரி வித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவர் நஜிபுர் ரகுமானை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் மாவட்டக் கல்வி அலு வலர் ராகவன் பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பிரம்பால் தாக்கிய அருளானந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  மாவட்டத்தில் அனைத்து அரசு, உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக், தொடக்க, நடுநி லைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்க ளுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் ஆசிரி யர்கள், தலைமையாசிரியர்கள் பார்த்து க்கொள்ள வேண்டும். இதை மீறி செயல்படும் ஆசிரியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி யின் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி எச்சரித்துள்ளார்.