tamilnadu

img

தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிர் வினாடி-வினா போட்டிகள்

புதுக்கோட்டை, நவ.9- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார அளவிலான துளிர் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன. மணமேல்குடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியை பள்ளியின் தலைமை அசிரி யர்(பொ) நவநீதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டிப் பேசினார். வட்டாராப் பொறுப்பாளர் இளை யராஜா மற்றும் சி.தங்கராஜ், பா.ஸ்ரீமதி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக ரா.நேதாஜி வரவேற்க, பெ.கண்ணன் நன்றி கூறினார். நடுநிலைப் பிரிவில் வேதியன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முத லிடத்தையும், மணமேல்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிஇரண்டாம் இடத்தையும், மஞ்சக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மூன்றாமி டத்தையும் பெற்றன. உயர்நிலைப் பிரிவில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாபட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  மணமேல்குடி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிகள் முறையே மூன்று இடங்களையும் பெற்றன. மேல்நிலைப் பிரிவில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,;, மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாபட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் வெற்றி பெற்றன. கறம்பக்குடியில் நடைபெற்ற சி.எஸ் வள்ளல் நினைவு வினாடி வினா போட்டிக ளுக்கு  வட்டாரத் தலைவர் ஏ.அந்தோணி சாமி தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ச.அன்பழகன் தொடங்கி வைத்தார். தொடக்கநிலைப்பிரிவில் செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆத்தியடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெக்கிக்காடு தொடக்கப்பள்ளிகள் வெற்றி பெற்றன. நடுநிலையில் இலை கடிவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செவ்வாய்ப்பட்டி நடுநிலைப் பள்ளி, கறம்பக்குடி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளிகள் வெற்றி பெற்றன. உயர்நிலையில் பிலாவிடுதி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளி, பல்ல வராயன்பத்தை, வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளிகள் வெற்றி பெற்றன. மேல்நிலைப் பிரிவில் முள்ளங் கறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி, கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி,  கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் வெற்றிபெற்றன.  போட்டிகளில் வெற்றிபெற்றவர்க ளுக்கு வட்டாட்சியர் பி.வில்லியம் மோசஸ், காவல் ஆய்வாளர் வி.பால சுப்பிரமணியன், அறிவியல் இயக்க மாவட்ட செயலர் மு.முத்துக்குமார், ரோட்டரி சங்க துணை ஆளுநர் எவ ரெஸ்ட் கே. சுரேஷ் உள்ளிட்டோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினர். புதுக்கோட்டை பிரகதம்பாள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற வினாடி-வினா போட்டிக்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கா.ஜெயபாலன் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு எம்.எஸ்.ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் எம்.வீரமுத்து, ஆசிரியர்கள் ரமேஷ், சுமதி, சத்யா, பழனிச்சாமி உள்ளிடோர் பேசினர். ஆசிரியர் மகேஸ்வரன் நன்றி கூறினார். துவக்க நிலையில் அசோக்நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, போஸ் நகர் தொடக்கப்பள்ளி, சோத்துப்பாளை தொடக்கப்பள்ளி மாணவர்களும், நடுநிலைப் பிரிவில் மேலப்பட்டி, போஸ்நகர், மணவிடுதி பள்ளி மாணவர்களும், உயர்நிலைப் பிரிவில் மணவிடுதி, புதுக்கோட்டை பிரகதம்பாள், புத்தாம்பூர் பள்ளிகளும், மேல்நிலைப் பிரிவில் புதுக்கோட்டை திரு இருதய மேல்நிலைப்பள்ளி, இராணியார் மேல்நிலைப்பள்ளி மாண வர்களும் வெற்றி பெற்றனர்.  ஆலங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் திருவரங்குளம் வட்டார அளவில் நடைபெற்ற போட்டி க்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.வின்செண்ட் தலைமை வகித்தார். பள்ளி பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுகை செல்வா, சமூக ஆர்வலர் எஸ்.ஏ.கருப்பையா, பத் திரிகையாளர் கருப்பையா உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினர். அறிவியல் இயக்க ஒன்றியச் செயலாளர் சசிக்குமார் வரவேற்க, ஒன்றியத் தலை வர் ராஜா நன்றி கூறினார். நடுநிலைப் பிரிவில் ஆலங்குடி புனித அற்புதமாதா நடுநிலைப்பள்ளி, பள்ளத்துவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளி, மாங்காடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் வெற்றி பெற்றன. உயர்நிலைப் பிரிவில் பள்ள த்துவிடுதி, ஆங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாங்காடு பெண்கள் மேல்நிலைபள்ளிகள் வெற்றி பெற்றன. மேல்நிலைப்பிரிவில் ஆலங்குடி ஆண்கள், மாங்காடு பெண் கள், ஆலங்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் வெற்றி பெற்றன.