புதுக்கோட்டை ஜூலை 21- தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை முற்றுகையிட்டு விவசாயத் தொழிலாளர்கள் வெள் ளிக்கிழமை போராட்டத்தில் ஈடு பட்டனர். கறம்பக்குடி ஒன்றியம் கன்னக் கண்காடு ஊராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேலை வழங் கப்படவில்லையாம். மேலும், ஏற்க னவே செய்த வேலைக்கும் சம்பளம் வழங்காமல் நிலுவை வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, தொடர்ந்து வேலை வழங்கக் கோரியும், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி யும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாதர் சங்க கிளைச் செயலாளர் செல்வி தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் கே. தங்கப்பா உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய கறம்பக் குடி வட்டார வளர்ச்சி அலுவலர், வரும் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து வேலை வழங்குவதாக வும், நிலுவைத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.