புதுக்கோட்டை, ஆக.20- ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பால்பிரான்சிஸ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கசாமி உள்ளிட்டோர் பேசினார். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட வர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தை யும் ரத்து செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.