புதுக்கோட்டை, டிச.3- புதுக்கோட்டை மாவட்டத் தைச் சேர்ந்த ராபின் என்கிற ராபின் சன் 3 துப்பாக்கிகள் வைத்துக் கொண்டு வனத்துறைக்கு சொந் தமான காடுகளில் மான் வேட்டை யாடி விற்பனை செய்து வந்துள் ளார். சிலநாட்களுக்கு மான் வேட்டை முடிந்து ஊருக்கு வந்த போது ஒரு விபத்தில் அவரது கார் சிக்கிக் கொண்டதால் திருக்கோகர்ணம் போலீசார் காரை பறிமுதல் செய்து சோதனை செய்த போது காரில் ரத்தக்கறை துப்பாக்கி துண்டுக ளும் காணப்பட்டது. அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் இருந்து 3 துப்பாக்கிகளும் கைப்பற்றப் பட்டது. மேலும் மான் வேட்டை, வேட் டையாடப்பட்ட மான் கறி விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட ராபின்சன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தாக கரூர் காவல் நிலைய போ லீஸ்காரர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிர மணியன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான இருவர் உள்பட மூன்று பேரும் முன்ஜாமினுக்காக முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கு பதிவான போ லீஸ்காரர் ராமச்சந்திரன் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட திட்ட அலுவலருக்கு மாவட்ட காவல் துறை தகவல் அனுப்பியுள்ளனர்.