tamilnadu

img

ரூ.7,500 நிவாரணம் வழங்குக! விவசாயத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மே 14- ஊரடங்கு தடைக் காலத்தைத் தொடர்ந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசயாத் தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சி அலுவலகங்களில் மனுக் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விதொச மாநிலப் பொருளாளர் எஸ். சங்கர் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் ஒடுக்கப்பட்டியிலும், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் கந்தர்வ கோட்டை ஒன்றியம் மட்டங்காலிலும், மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி கறம்பக்குடி ஒன்றியம் தீத்தான்விடுதியிலும், விதொச மாவட்ட பொருளாளர் க.சண்முகம் அன்னவாசல் ஒன்றியம் பரம்பூரிலும்.

மாவட்ட துணைத் தலைவர் வே.வீரையா ஆவுடையார்கோவில் ஒன்றியம் இரும்பா நாட்டிலும், மாவட்ட துணைத்தலைவர் எம்.சண்முகம் விராலிமலை ஒன்றியம் புலியூரிலும்,  மாவட்ட துணைச்செயலாளர் ஏ.எல். பிச்சை விராலிமலை ஒன்றியம் அரசமலை யிலும், திருவரங்குளம் ஒன்றியச் செயலா ளர் ஏ.செந்தமிழ்ச்செல்வன் கொத்தக்கோட் டையிலும், அன்னவாசல் ஒன்றியச் செய லாளர் எம்.ஜோஷி சித்தன்னவாசலிலும், ஏ.நல்லதம்பி ஒலியமங்கலத்திலும் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றனர். காவல்துறையின் அடக்குமுறையை மீறி ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலா ளர்கள் பங்கேற்ற  ஆர்ப்பாட்டம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெற்றது.

குடவாசல் 
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றி யத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து ஊராட்சி கிராமங்களிலும் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கொரடாச்சேரி அருகே உள்ள விஸ்வநா தபுரம் ஊராட்சி கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் பி.பரமசிவம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கோரிக்கையை விளக்கி பேசி பின்னர் ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தார். போராட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கலை மணி, செம்மங்குடி ஊராட்சியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஊராட்சி தலை வரிடம் மனு கொடுத்தார்.

தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி முசிறியம் ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தார்.  திருக்கண்ணமங்கை ஊராட்சி தலை வரிடம் வி. தொ. சங்கத்தின் ஒன்றிய செயலா ளர் ஆர்.மணியன், அதே போல் கமலாபுரத்தில் ஒன்றிய தலைவர் ஆர்.மருதையன், ஆய்க்குடியில் விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் மற்றும் வடகண்ட ஊராட்சியில் மாவட்ட குழு உறுப்பினர் கே.கோபிராஜ் ஆகியோர் தலைமையில் மொத்தம் 18 ஊராட்சி அலுவல கம் முன்பாக கோரிக்கையை விளக்கி போராட் டம் நடத்தி பின்னர் ஊராட்சி தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது இதில் ஏராளமான விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். நன்னிலம் ஒன்றியம் திருமீயச்சூர் கிராம ஊராட்சி பஞ்சாயத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமையில் ஊராட்சி தலைவரிடம் மனு வழங்கப்பட்டது. அதே போல் கொல்லுமாங்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சரவண.சதீஷ் தலைமை வகித்தார்.

நாகப்பட்டினம்
நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றி யம், வாட்டாக்குடி ஊராட்சி மன்றம் முன்பு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாநிலப் பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம் தலைமையில் மனு அளித்துப் போராட்டம் நடைபெற்றது. தலை ஞாயிறு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, சி.பி.எம். ஒன்றியக்குழு உறுப்பினர் கே.அலெக்சாண்டர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதுபோல், அனைத்து ஊராட்சி மன்றங்கள் முன்பும் போராட்டம் நடைபெற்றது.

சீர்காழி 
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பச்சை பெருமாநல்லூர் ஊராட்சி யில் 100 நாள் வேலை செய்யக் கூடிய பய னாளிகளிடம் கையெழுத்து வாங்கி ஊராட்சி எழுத்தர் மாரிமுத்துவிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கையொப்பமிட்டு கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ஊராட்சியில் விதொச மாவட்ட செயலா ளர் பி.ரமேஷ் தலைமையில் மனு கொடுக் கப்பட்டது. சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், விதொச ஒன்றிய செயலாளர் சீனிவாசன், எம்ஜிஆர் நகர் கிளை செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர். வேப்பந்தட்டை ஒன்றியம் வெங்கலம் மற்றும் தொண்டமாந்துறை ஊராட்சி பெரம்பலூர் ஒன்றியம் அம்மாபாளையம் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய ஊராட்சிகளில் மனு கொடுக்கப்பட்டது.

தலைஞாயிறு
விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொ துச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் பங்கேற்றார்.