districts

img

2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்

திருவண்ணாமலை, டிச. 10- விவசாய தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 6ஆவது மாநாடு வேங்கிக்காலில் சனிக்கிழமை (டிச. 10) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஏ.நடராசன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார், மாவட்ட துணைத் தலைவர் கே.கே.வெங்கடேசன் வரவேற்றார். எஸ்.பி.ராமலிங்கம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைத் தலைவர் பி.சுப்பிர மணி மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் எம்.பிர கலாதன், வேலை அறிக்கையையும், பொருளாளர் எஸ்.பாலசுந்தரம் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் ஏ.டி.கோதண்டம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.முருகையன் நன்றி கூறினார்,
தீர்மானங்கள்
60 வயதான அனைவருக்கும் உதவித்தொகை 3,000 வழங்க வேண்டும், வீடு இல்லாத மக்களுக்கு வீட்டு மனையும், பட்டாவும் வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக பி.கணபதி, செயலாளராக கே.கே.வெங்கடேசன், பொருளாளராக எஸ்.பாலசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.