புதுக்கோட்டை, ஜன.12- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அரசுப் பேருந்து மீது லாரி பயங்க ரமாக மோதியதில் லாரி ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படு காயமடைந்தனர். சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை இரவு சிவ கங்கை நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேரு ந்தை ஓட்டுனர் சதாசிவம் (50) இயக்கி வந்தார். பேருந்து புதுக்கோட்டை மாவ ட்டம் திருமயம் அருகே உள்ள பில்ல மங்கலம் வளைவில் திரும்பும்போது, எதிரே தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக பயங்கர மாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி யது. இந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கண்ணன்(45), பேருந்தில் பயணம் செய்த காளை யார்கோவில் மறவமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40), சிவக ங்கை மாவட்டம் ஏரியூர் ஆபத்தா ன்பட்டியை சேர்ந்த சேவாகொடி மகன் கவுசிக்(10) ஆகிய 3 பேர் சம்பவ இட த்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்து ஓட்டுனர் சதா சிவம், அதில் பயணம் செய்த விஜய காளீஸ்வரி, மலைச்சாமி, சரண்யா, லட்சுமி, சுந்தர், வீரன், முத்துலட்சுமி, கிரு ஷ்ணகுமார், மீனாட்சி உள்பட 15 பேர் படு காயமடைந்தனர். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் திரு மயம் காவல் நிலையத்திற்கும், தீய ணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரி வித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் பொது மக்கள் உதவியுடன் காயம டைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த கவுசிக், கண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வி ற்காக திருமயம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் திரு மயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் விபத்து மரணங்கள் புதுக்கோட்டையில் இருந்து திரு மயம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்தி லேயே இறந்தனர். இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யப்ப பக்த ர்கள் சென்ற வேன் மீது லாரி மோதி யதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 10 பேர் இறந்தனர். இதேபோல தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று கொண்டே வருகிறது. குறிப்பாக நமணசமுத்திரத்தில் உள்ள சுங்கசாவடிக்கும் திருமயம் நகருக்குள் வராமல் மதுரைக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை வரை அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்த விபத்துகளை தடுக்க மாவட்ட காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.