tamilnadu

img

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் 2024-ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றதாகும். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் 2024-ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
10 சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 746 காளைகள் மற்றும் 297 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். 2 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.