பொன்னமராவதி, ஜூலை 14- தமிழகத்தில் முதல் முறையாக பொன்னமராவதி பேரூ ராட்சியில் குப்பைகள் பிரித்து வாங்குவதை கண்காணிக்க டிஜிட்டல் கார்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி யில் தமிழகத்திலே முதல் முறையாக குப்பைகள் தினசரி வீடு வீடாக தரம் பிரிதது சேகரம் செய்வதை டிஜிட்டல் கார்டு மூலம் மின்னணு முறையில் கண்காணிக்கும் மென்பொ ருள் யூனிக் டெக்னாலஜி நிறுவனர் ராஜ்குமார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவு க்கரசு மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி ஆகி யோரால் பொன்னமராவதி பேரூராட்சியில் அறிமுகப்படுத்த ப்பட்டது. பின்னர் அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.