tamilnadu

உள்ளாட்சி வாக்காளர் பட்டியல்கள் கருத்துகள் தெரிவிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஏப்.25-புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத்தேர்தல் 2019-க்கான வாக்குச்சாவடி பட்டியல்கள் 25.3.2019 அன்று வெளியிடப் பட்டது. இந்த பட்டியல்கள் மீது ஏதேனும் ஆட்சேபனைகள், கருத்துக்கள் இருப்பின் அதனை எழுத்துப்பூர்வமாக 2.5.2019-க்குள்தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நேரிலோஅல்லது தபால் மூலமாகவோ அளித்திட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு பெறப்படும் ஆட்சேபணைகள் விதிமுறைகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு தேவைப்படின் வாக்குச்சாவடிகளின் பட்டியல்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித் துள்ளார்.