புதுக்கோட்டை, பிப்.28- காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை எழுப்பினர். புதுக்கோட்டை மாவட்ட விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் வெள்ளிக்கிழமையன்று நடை பெற்றது. கூட்டத்தில் விவசாயிக ளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதி களும் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எ.ராமையன்: கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட மாவட் டத்தின் அனைத்துப் பகுதிகளையும் காவாரி, குண்டாறு ,ணைப்பு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கந்தர்வக்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செயய் 20 நாட்களாக விவ சாயிகள் காத்திருக்க வேண்டி யுள்ளது. உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த வேளாண் மட்டலத்துக்கு உட்பட்ட பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் முழு வதையும் இணைக்க வேண்டும். ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்திட்டம் வேண்டாம் எனப் போராட்டம் நடத்தி யதற்காக நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மீது போட்டப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றார்., தமிழ்நாடு விவசாய தொழிலா ளர் சங்க மாநில பொருழாளர் சங்கர்: டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டல அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேகமாக குழு அமைத்து, அதில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கப் பொறுப்பாளர்களை பிரதி நிதிகளாக சேர்க்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. வருடத்திற்கு 56 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இந்த குறைபாடுக ளை சரிசெய்து வருடத்திற்கு நூறு நட்கள் வேலை வழங்குவதற்கும், சம்பளத்தை உடனுக்குடன் வழங்கு வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு.மாதவன்: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். இத்திட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் வில்லுனி ஆறு மற்றும் அம்புலி ஆறையும் இணைக்க வேண்டும். இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ். தனபதி: இறப்பு, வாரிசு சான்றிதழ் பெற முடியாத சூழலில் உள்ளோ ருக்கு சிறப்பு உத்தரவு மூலம் பட்டா மாறுதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டைப்போல நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும். தெற்கு வெள்ளாறு பாசன தாரர் கூட்டமைப்பு தலைவர் துரை மாணிக்கம்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை 2 மாதங்களுக்கு நீட்டித்து தரவேண்டும். பயிர்க் காப்பீடு திட்டத்தில் கடந்த சில ஆண்டு களுக்கு விடுபட்டுள்ளோருக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.