tamilnadu

img

அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: சிபிஐ

புதுக்கோட்டை:
நாடாளுமன்றத்தில் தவறான தகவலைத் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குடியரசுத் தலைவர் உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

சமூக நீதிக்கான போராட்டத்திற்கான தேவை தற்பொழுது அதிகரித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பவே பாஜக அரசு மொழிப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இந்தி மொழிகுறித்த அமித்ஷாவின் கருத்து மக்களைப் பிளவுபடுத்தும் நாசகர வேலை. காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர்அமித்ஷா கூறினார். தற்போது நீதிமன்றத்தில்அவர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டு உள்ளார் என்று மத்திய அரசு சார்பில் கூறியிருப்பதன் மூலம் அவர் அரசியல் சட்டத்தை மீறிவிட்டார். எனவே, குடியரசுத் தலைவர் அமித்ஷாவை உடனடியாக உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்,உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் உடனடியாக ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று அங்கு நடக்கும்உண்மை நிலைகளை ஆய்வு செய்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட வுடன் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து  தேர்தலை எதிர்கொள்வோம். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளிலும் இதே முறையைக் கடைபிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.