புதுக்கோட்டை, ஜூலை 26- புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசலை அடுத்த தளிஞ்சி பகுதி மக்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமையன்று சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தளிஞ்சி பெரியகுளம் அருகில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் வீடற்றவர்களுக்கு குடிமனைப் பட்டா வும், இலவச வீடும் கட்டித்தர வேண்டும். கால்நடை மருத்துவமனை, சுடுகாட் டுக்கு மெட்டல் சாலை, குடிநீர்நீர் பிரச் சனை, முதியோர் ஓய்வூதியம், நூறு நாள் திட்டத்தில் அனைவருக்கும், வேலை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் சி.முருகன் தலை மை வகித்தார். பிச்சை, பொன்னையா, சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப் பையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.ஜோஷ், ஆர்.சி.ரெங்கசாமி, பி. நடராஜன், ஏ.கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.