புதுக்கோட்டை, ஜூன் 16- பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தைத் தட்டிக்கேட்டதால் தலித் பெண்ணின் வீடு புகுந்து கொடூரமான முறையில் தாக்கு தல் நடத்திய சாதி வெறியர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருக்காக்குறிச்சி ராஜா குடியி ருப்பைச் சேர்ந்த ஆத்மநாதன் மகள் காளீஸ் வரி. தலித் வகுப்பைச் சேர்ந்த காளீஸ்வரி கடந்த செவ்வாயன்று தனது வீட்டுக்கு அரு கில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த வீரப்பன் மகன் தர்மராஜ் (28) காளீஸ்வ ரியை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதிலிருந்து தப் பித்து வீட்டுக்கு வந்து நடந்த சம்பவத்தை தாயாரிடம் விளக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காளீஸ்வரியின் மாமன் மகன் கிருஷ்ணமூர்த்தி, தர்மராஜிடம் ‘‘ஏன் இப்படி நடந்துகொண்டாய்’’ எனக் கேட்ட போது, கிருஷ்ணமூர்த்தியை தங்க ராஜ் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்துள்ள சம்பவத்தை விளக்கி கிருஷ்ண மூர்த்தி, காளீஸ்வரி மற்றும் அவரது தயார் கவிதா ஆகியோர் ஆலங்குடி அனைத்து மக ளிர் காவல்நிலையத்தில் புதனன்று புகார் அளித்தனர். இதனால், மேலும் ஆத்திரமடைந்த தர்ம ராஜ் மற்றும் அவரைச் சேர்ந்த சுப்பிரமணி யன், சுரேஷ், சரவணன், பாலு உள்ளிட்ட 12 பேர் கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தும், தடுக்க வந்த அண்டை வீட்டாரையும் கொலைவெறியுடன் தாக்குல் தொடுத்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயம டைந்த தங்கையா, கிருஷ்ணமூர்த்தி, கவிதா, அமுதா, கலைச்செல்வன், அஜித்குமார் ஆகி யோர் தற்பொழுது புதுக்கோட்டை மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வடிவேல் விசா ரணை நடத்தியுள்ளார். மருத்துவமனைக்கு வந்து கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வ நாதன் விசாரணை நடத்தியுள்ளார். ஆனா லும், தாக்குதல் தொடுத்தவர்கள் மீது காவல் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், ஒன்றியச் செயலா ளர் ஆர்.காமராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி. ஜீவானந்தம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளா ளர் எஸ்.பாண்டிச்செல்வி, மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஓவியா, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், மிடறு முருகதாஸ் உள்ளிட்டோர் மருத்துவ மனைக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் தெரிவித்துள்ளதா வது: மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் வெளியில் தெரிவதில்லை. இத னால், பல குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டே இருக்கின்றனர். இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் மட் டுமே காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், மாவட்ட காவல்துறையோ, முறையான வழக்குப் பதிவு செய்வதில்லை. குற்றவாளி கள் உடனடியாக கைது செய்யப்பட்டு நட வடிக்கை எடுக்கப்படுவதில்லை. இத னால், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடு படுவதற்கு மறைமுகமாக காவல்துறை யினரே உடந்தையாக இருக்கின்றனரோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது. எனவே, கொடூரத்தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக தீண்டாமை மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜன நாயக மாதர் சங்கத்தோடு இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.