அறந்தாங்கி, ஏப்.21-புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 9ம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் வீ.ஜெயராஜ் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் என்கே.ராஜேந்திரன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி மற்றும் தமிழ்வேள் உமாமகேஸ்வரனார் கரந்தை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் இரா.குருநாதன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக இயற்பியல் துறைத் தலைவர் சிவராமன் நன்றி கூறினார்.