அறந்தாங்கி, அக்.6- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் காந்தியின் 150-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மணமேல்குடி காந்தி விளையாட்டுக் கழகம், த.மு.எ.க.ச, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இலக்கிய மன்றமும் இணைந்து காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அரசு பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். த.மு.எ.க.ச முன்னாள் கிளைச் செயலாளர் கரு.இரா மநாதன் மணமேல்குடி நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ந.முத்துநிலவன் சிறப்புரை யாற்றினார். மாநில அளவில் கைப்பந்து போட்டியில் தேர்வு பெற்ற 12-ம் வகுப்பு மாணவர் எம்.மகேஸ்வனை வாழ்த்தி பாராட்டினர். மேலும் 10, 12-ம் வகுப்பு மணமேல்குடி ஒன்றிய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாரா ட்டி கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் த.மு.எ.க.ச நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக கணேசன் நன்றி கூறினார்.