புதுக்கோட்டை, மார்ச் 15- கரும்பு விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் ஆட்சி யர் தெரிவித்தது: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை இந்த ஆண்டி லிருந்து தொழிற்சாலை உரிமம் ஒப்படைக் கப்பட்டதன் அடிப்படையில் உரிமம் ரத்து செய்யப்பட்டு சர்க்கரை ஆலை இயங்காது என்று நிர்வாகம் கடிதம் மூலமாக தெரி வித்ததை தொடர்ந்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2019-20 அரவைப் பரு வத்திற்கு இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை பதிவு செய்த கரும்பினை 31.03.2020க்குள் கரும்பு வெட்டி புகழூர் இ.ஐ.டி பாரி சர்க் கரை ஆலைக்கு அனுப்பப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த தற்கு இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை துணை பொது மேலாளர் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் முடிப்பதற்கு உறுதி அளித்துள்ளார். கந்தர்வக்கோட்டை ஒன்றியத்திலுள்ள அனைத்து கரும்புகளும், கறம்பக்குடி ஒன்றி யத்திலுள்ள மீனம்பட்டி, வலங்கொண் டான்விடுதி வருவாய் கிராமம் பகுதிகளில் 2020-21 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு நடப்பட்ட கரும்பு, மறுதாம்பு பயிர் மற்றும் இனிமேல் நடப்படும் கரும்பு, வரும் மறு தாம்பு கரும்பினை தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்ய விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரி வித்துள்ளனர். மேலும் திருவரங்குளம், அரிமளம், குன்றாண்டார்கோவில் அன்னவாசல், விராலிமலை, அறந்தாங்கி ஒன்றியம் மற்றும் கறம்பக்குடி ஒன்றியத்தில் மழையூர் வரு வாய் கிராமம் பகுதிகளில் உள்ள கரும்புகள் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோத் தாரி சர்க்கரை ஆலை காட்டூருக்கு கரும்பு வெட்டி அனுப்ப விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையினை பரிந்துரை செய்து சர்க்கரைத்துறை ஆணை யருக்கு உடன் அனுப்பி, கரும்பு நடவு பணியினை ஊக்குவிக்கப்படும் என விவ சாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட வரு வாய் அலுவலர் பெ.வே.சரவணன், வேளா ண்மை இணை இயக்குநர் சுரே~;பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.