புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 110 தீக்கதிர் ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகளில் குறைந்தபட்சம் ஒரு தீக்கதிர் ஆண்டு சந்தாவை சேர்ப்பது என கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கட்சி கிளை மாநாடுகளில் முதல்கட்டமாக 110 தீக்கதிர் ஆண்டுச் சந்தா சேகரிக்கப்பட்டது. அதற்கான தொகை ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரத்தை புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்டக்குழு கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.