நாட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019-20ம் நிதியாண்டில் 6.1 ஆக குறையும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கான ரெப்போ கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தலைமையில் இன்று நிதிக்கொள்கை கூட்டம் நடைபெற்றது. இதில், வங்கிகளுக்கான ரெப்போ கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை 5.40% லிருந்து 5.15 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நான்கு முறை 1.10% ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த நிலையில், தொடர்ந்து 5ஆவது முறையாக ரெப்போ கடன் வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2019-20இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதத்தில் இருந்து 6.1 சதவிகிதமாக ஆக குறையும் . மேலும் 2020-21ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.