tamilnadu

img

மின்சார திருத்தச் சட்டத்தை கைவிடுக! விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, மே 30- மின்சார திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலுப்பூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் என்.சந்திரமோகன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் டி. இராசையன், மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகையில் ஒன்றி யச் செயலாளர் கே.கிருஷ் ணன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநி லத் தலைவர் வீ.சுப்ரமணி யன் உரையாற்றினார். சிக்க லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியத் தலைவர் ஜி. முருகையன் தலைமை வகித் தார்.

மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல் ஆகியோர் உரையாற்றினர். கீவளூர் ஒன்றியத்தில் தேவூர் கடைவீதியில் ஒன்றியத் தலைவர் கோபாலன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்டத் தலை வர் எம்.என்.அம்பிகாபதி உரையாற்றினார். தலைஞாயிறு ஒன்றியம் கொளப்பாடு கடைவீதி ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் அம்பிகாபதி, ஒன்றி யச் செயலாளர் செல்லையன் ஆகியோர் உரையாற்றினர். மயிலாடுதுறையில் ஒன்றியத் தலைவர்கள் எம்.மாரி யப்பன், ஏ.ஜான்டேவிட் தலை மையில்  நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் ஒன்றிய செயலா ளர்கள் டி.ராயர், வைரவன் ஆகியோர் உரையாற்றினர்.

காங்கனிகோட்டம் கடைவீதி யில் ஒன்றியத் தலைவர் பி.எஸ்.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் கோவை.சுப்ர மணியன் உரையாற்றினார். திருமருகலில் ஒன்றியத் தலைவர் ஸ்டாலின்பாபு தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் பொன்மணி உரையாற்றினார். சீர்காழி வைத்தீஸ்வரன்கோவிலில் ஒன்றியச் செயலாளர் நாகையா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.வி.ஆர்.ஜீவா னந்தம் உரையாற்றினார்.